தென்காசியில் ஏழை எளிய மக்களுடன் கொண்டாடப்பட்ட அன்னை தெரசா பிறந்த தின விழா..

தென்காசி பசியில்லா தமிழகம் மற்றும் யெகோவா நிசி பவுண்டேஷன் இணைந்து ஏழை எளிய மக்களுடன் அன்னை தெரசா பிறந்த தின விழாவை கொண்டாடினர். தென்காசி பகுதியில் ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அன்னை தெரசாவின் பிறந்த தினமான ஆகஸ்ட் 26 அன்று அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஏழ்மை நிலையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு மூலமாகவும், பசியில்லா தமிழகம் மற்றும் யெகோவா நிசி பவுண்டேஷன் மூலம் செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடிப்படை தேவையான மின்சார வசதி இல்லாமலும், உரிய சாலை வசதி இல்லாமலும் சுமார் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். 40 குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பள்ளி செல்லாதது மிகவும் மனம் வேதனை அளிக்கிறது என்பதை உணர்ந்து முதற்கட்டமாக அவர்களுக்கு கல்வி கொடுப்பதாக திட்டமிட்டு அதற்கான முயற்சியில் பசியில்லா தமிழகம் யெகோவா நிசி பவுண்டேஷன் களம் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தொடர்பு கொண்டு எழுத்து மூலம் தீர்வு காண  திட்டமிட்டுள்ளது. கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறியுள்ளார், இந்த மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதே கனவாக உள்ளது. வரும் காலங்களில் இவர்களில் இருந்து பல அப்துல் கலாம்களை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டு பணிகள் செய்து கொண்டு இருக்கிறோம் என யெகோவா நிசி பவுன்டேசன் மற்றும் பசியில்லா தமிழகம் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா, ஜமீமா ஜின்னா, ஜெய்கரன்,‌ கண்ணன் மற்றும் யெகோவா நிசி உறுப்பினர்கள் சக்தி, ப்ராங்ளின், ராஜா, நம்பி, கணேஷ், ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னை தெரசாவின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!