தென்காசியை தனி மாவட்டமாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நீண்ட நாட்களாக தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக வருவாய் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்த நிலையில் அவர்களும் நெல்லை மாவட்ட பரப்பளவு உள்ளிட்ட சில விவரங்களை முதல்வருக்கு எடுத்துக் கூறினர்.இதனையடுத்து நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக்கலாம் என்ற முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் இன்று வெளியிட்டார். 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டார பகுதிகள் உள்ளடங்கும்.தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!