தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனக்கு இரு சக்கர வாகனம் வழங்கவில்லை எனவும், பலமுறை மாற்றுத்திறனாளி அலுவலரிடம் நேரில் சென்று கேட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதாக தென்காசி மாவட்ட வாட்ஸப் குழுக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்ரோல் வாகனம் கேட்டு 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் அளித்துள்ளார். பெட்ரோல் வாகனம் வழங்குவதற்கு முன்னதாக நேர்முகத் தேர்வு நடைபெறும். இது குறித்து மாற்றுத்திறனாளிக்கு தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பம் அளித்த மாற்றுத்திறனாளியிடம் இதன் விவரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் நலத்திட்டங்கள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான மாற்றுத்திறனாளிகள் பலர் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.