தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் பழுதுகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய அவரது செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறு வட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இந்நிலையில், 1300-க்கும் மேற்பட்ட தானியங்கி மழை மானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை, எந்த பகுதியில் மழை குறைவு உள்ளிட்ட தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில் தானியங்கி மழை மானிகளின் தொடர்பு சில நேரம் துண்டிக்கப்படுகிறது. நல்ல மழை பெய்யும் நேரத்தில் சென்சார் கட்டாகி விடுகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழையின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே தமிழக அரசு அனைத்து மழை மானிகளிலும் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களின் வானிலை நிலவரத்தையும் மிகத் துல்லியமாக வழங்கி வருகிறார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா. இவரது வானிலை அறிவிப்புகள் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.