தென்காசி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; 206 பேருக்கு பணி நியமனை ஆணை..

தென்காசி மாவட்ட நிர்வாகம், வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் T.R. உதய கிருஷ்ணன் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இம்மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 74 வேலையளிக்கும் நிறுவனங்கள், 5 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1,020 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாமில் 115 ஆண் வேலை நாடுநர்களுக்கும் 91 பெண் வேலை நாடுநர்களுக்கும் என மொத்தம் 206 வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு 41 வேலை நாடுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்முகாமில் 18 நபர்கள் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இம்முகாமில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (பொ) மரு. கா.சண்முக சுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (மு.கூ.பொ), ஹரிபாஸ்கர், ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!