தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.



ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ மீனாட்சி, தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயப் பிரகாஷ், இயன்முறை மருத்துவர் பால கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநல மருத்துவர் நிர்மல், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முகாமில், மாற்றுத் திறனாளிகள் தேவையான அரசு உதவிகளை பெற ஏதுவாக, புதிய தேசிய அடையாள அட்டைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுகந்தி, சகிலா பொன் எமிலி, ஜீவா, பவித்ரா வைதேகி, சிறப்பு ஆசிரியர்கள் அருள் ஞான ஜோதி, பிரவீனா, ஜெய ஜோதி, முத்து லெட்சுமி, சிவ வீரவநங்கை, அலுவலக பணியாளர்கள் சுந்தரி, சாகுல் ஹமீது, சாலமோன் ராஜா, காந்திமதி, தங்கம், மற்றும் முகாம் உதவியாளர்கள் ஜெயந்தி, முத்து லெட்சுமி, ஜோதி, மாணிக்க தேவி, அம்பிகா செல்வி, ஜெயலெட்சுமி, குணசுந்தரி, குழந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.