தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன் குளம் பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் எஸ்.பி.எம் நிதியிலிருந்து ரூபாய் 5.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ்.பட்டமுத்து, எஸ். முத்துலெட்சுமி, எம். இசக்கிப்பாண்டி, கே.முருகசெல்வி, மக்கள் நலப் பணியாளர் எஸ். அந்தோணி செல்லத் துரைச்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்