ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றுகை செய்யப்பட்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955 பிரிவு 6 (அ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் வாகன உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்த முன் வராததால் தனியாரது வாகனங்கள் அரசுடைமையாக்கப் பட்டது.

 

 

மேற்படி இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 45-ஐ திறந்த முறை பொது ஏலத்தில் தென்காசி அலகு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் 26.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23.04.2025 முதல் 25.04.2025 வரையிலான நாட்களில் தென்காசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

 

அதிகபட்ச ஏலதாரர் என அறிவிக்கப்பட்ட நபர் அவர் கோரிய தொகைக்கு உரிய சரக்கு மற்றும் சேவை வரியினை ஏலத் தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு உண்டான தொகையினை மூன்று தினங்களுக்குள் செலுத்த வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!