தென்காசியில் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில், எம்.கே.வி.கே பள்ளியில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முத்துகுமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம், நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் மற்றும் இசக்கியப்பன், பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும், ஆசிரியர்கள் அதிகாரிகளால் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்றும் தன்னுடைய கருத்தினை ஆசிரியர்களிடையே தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சதீஷ்குமார் பதிவு செய்தார். ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு நீ அர்ப்பணி என்ற தலைப்பில் தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் காளிராஜ் உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஆசிரியர்கள், நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.