குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது மருத்துவ மனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன் கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு சில சிகிச்சையை செய்துள்ளனர்.

 

எனினும் காய்ச்சல் சரி ஆகாத நிலையில் இரவு 8 மணி அளவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு குழந்தையை அழைத்துச் சென்ற போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் நிலைமை மிக மோசமடைந்து மூளைக் காய்ச்சலுக்கு உண்டான அறிகுறி உள்ளது. உடனடியாக நீங்கள் அரசு மருத்துவ மனைக்கு செல்லுங்கள் என கூறி, அவரே அரசு மருத்துவ மனைக்கும் ஒரு குழந்தை தீவிர பாதிப்புடன் வருகிறது, குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை தேவை, அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுங்கள் என தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தென்காசி மருத்துவ மனை குழந்தைகள் நலப் பிரிவில் மருத்துவர்களும் செவிலியர்களும், அவசர சிசைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்துள்ளனர்.

 

குழந்தை சரியாக 8.27 மணிக்கு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட உடன், மருத்துவர்கள் குழு சிகிச்சையை விரைவாக தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், குழந்தைக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி 8.55 மணிக்கு உயிரிழந்துள்ளது. ஆகவே அரசு மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை. குழந்தைக்கு எந்த அளவு உரிய சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது. இவ்வாறு தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!