தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத் தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த கீழப்பாவூர் ரைஸ் மில் தெருவை பகுதியை சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவரின் மகன் தங்கசாமி (45) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் விற்ற பணம் ரூபாய் 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்