மையோனைஸ் விற்பனைக்கு தடை; கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் முட்டையில் இருந்து தயார் செய்யப்படும் மையோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161, ஏப்ரல் 8, 2025 இன் படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை இளம் தலை முறையினரை அதிகளவு கவர்ந்துள்ளது. வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள மையோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் கூறப்பட்டு உள்ளதாவது, மயோனைஸ் தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகள், போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின் படி, சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சயா கோலி மற்றும் லிஸ்டீரியா மொனோ சைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 

மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து மிக அதிகம்”. உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்கள் அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர் கொள்வார்கள். ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

 

உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடைபிடிக்க வேண்டும். மயோனைஸை சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. மேலும், தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!