தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.11.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை காணொளி காட்சி வாயிலாக (01.08.2024) இன்று திறந்து வைத்தார்.
தென்காசியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை பார்வையிட்டார்.





உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், காவல்துறை துணைத்தலைவர் (திருநெல்வேலி மண்டலம்) பிரவேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் து.பெ.சுரேஷ்குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர். நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.