தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்; தமிழக அரசு உத்தரவு..

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்தவர் ஏ.கே. கமல் கிஷோர். இதேபோன்று தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!