தென்காசி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி ராணி ஸ்ரீகுமார், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கொடுக்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை, ரயில்வே கேபின், சிற்றுண்டி கடைகள், லிப்ட் வசதி, சுகாதார வளாகங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.





அப்போது அங்கு நின்ற பயணிகள், தென்காசியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு செல்வதற்கும், தென்காசியில் இருந்து ஈரோட்டிற்கு செல்வதற்கும் பகல் நேரத்தில் ரயில் சேவை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்நிகழ்வில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தென்காசி நகர நிர்வாகிகள் பால சுப்பிரமணியன், ராம்துரை, பால்ராஜ், ஷேக்பரீத், சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் வினோதி ராமையா, சுப்பிரமணிய சாமி கோவில் அறங்காவலர் இசக்கிரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி முகமது ரபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்