தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.1,00,680 மதிப்பில், மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் ஆகியோர் வழங்கினர். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.



தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தேசிய அறக்கட்டளை (National Trust)- இல் உள்ளூர் குழு (Loval Level Committee) வாயிலாக திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 09 மாற்றுத்திறானளி நபர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற ஏதுவாக பாதுகாவலர் நியமன சான்றுகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.5034 வீதம் ரூ.1,00,680-க்கான மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 948 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), செல்வி.கவிதா (சங்கரன்கோவில்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.