தென்காசியில் மஜக சார்பில் நடந்த குடியரசு தின மருத்துவ முகாம்..

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் குடியரசு தின மருத்துவ முகாம் நடந்தது. இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட அவைத் தலைவர் செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது இஸ்மாயில், முஹம்மது மன்சூர், சங்கை இஸ்மாயில், மாவட்ட இளைஞரணி செயலாளர் சையத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆதம் ஹனிபா வரவேற்றார். மருத்துவ முகாமை மஜக மாநில துணைச் செயலாளரும், தென்காசி மாவட்ட பொறுப்பாளருமான அலிப் பிலால் ராஜா துவங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி நகர்மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான ஆர்.சாதிர், விடுதலை சிறுத்தை கட்சி நகரச் செயலாளர் ஹக்கீம், 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முஹம்மது ராசப்பா, 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மஜக நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் முருகேசன், அன்னை உதவிக்கரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் செல்லப்பா ராஜா, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுப்புலட்சுமி நரசிம்ம ஹோம் சேர்மன் டாக்டர் பி. சுப்ரமணியன், கடையநல்லூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம். முரளிதரன், ப்ரோ விஷன் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் டாக்டர் ராஜகுமாரி, நிலா பல் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஜமிலால் சுலைகால், நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் டாக்டர் சந்திரா, யூத் ரெட்கிராஸ் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி உரிமையாளர் முகமது அன்சார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். நிகழ்வில் தென்காசி மனிதநேய ஜனநாயக கட்சி நகர நிர்வாகிகள் முருகன் மற்றும் தென்காசி நகர மருத்துவ அணி இத்தியாஸ் அமீன் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!