தென்காசி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி -மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்…

தமிழகம் முழுவதும் இந்த மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

மருந்துக் கடைகள், மருத்துவப் பணி, பால் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தேவையின்றி வாகனங்களில் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

நாளை (20/07/2020) காலை ஆறு மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் உள்ள நிலையில், தென்காசி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய வீதிகள்,சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், ஆலங்குளம், சுரண்டை சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கின் காரணமாக முக்கிய வீதிகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி காணப்பட்டது.

தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் இது மூன்றாவது முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!