தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா தென்காசி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், இந்தியன் வங்கி மேலாளர் வினோத்குமார் முன்னிலையிலும் விழா நடந்தது. விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் திருமலை குமாரசாமி, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேலன், உதவி மேலாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முகம்மது சலீம் மீரான், கவிஞர் குழந்தை ஜேசு, நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், ஜூலியா ராஜ செல்வி, நிஷா, கிறிஸ்டிபாய், உதவியாளர் ஜேசுராணி வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகேசன் ராஜி, கீழப்புலியூர் செல்வி, இலஞ்சி செந்தில்வேல், சுந்தரகுமாரி, வாசகர்கள் பொது மக்கள், போட்டி தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









