பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இரண்டாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 640 பள்ளி மாணவச் செல்வங்கள் இத்தேர்வினில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உதவித்தொகை வழங்கப்படுவதற்கான மாதிரி தேர்வாக இத்தேர்வு இருப்பதால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர் செல்வங்கள் ஆர்வமுடன் அதிக அளவில் தேர்வில் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட மைய நூலகம் மூலம் கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற இலவச பயிற்சி மாதிரி தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உதவித்தொகை பெற்றுவருவது நம் மாவட்டத்திற்கும் தென்காசி நூலகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.




மேலும், இத்தேர்வு நிறைவுற்றதும் அறிவியல் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில், துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஐக்கிய நல கூட்டமைப்பு தலைவர் வி.டி.எஸ்.ஆர் நிறுவனர் முகம்மது இஸ்மாயில், தேசிய பசுமைப்படை மாவட்ட செயலாளர் பேராசிரியர் விஜயலட்சுமி, அருட்தந்தை போஸ்கோ ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாதிரி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்ற 40 மாணவ செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் மாரியப்பன், அறிவியல் இயக்க சுரேஷ்குமார், முதல் நிலை நூலகர் முனியப்பன், ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூலகர்கள் பிரமநாயகம், சுந்தர், ஜூலியாராஜ செல்வி, நிஹ்மதுனிஸா, ஆசிரியர்கள் கற்பகம், செண்பககுமார், இஸ்மாயில், வின்சென்ட், செந்தில் ஒலிவாவா, ஸ்டெல்லா, வாசகர் வட்ட குழந்தைஜேசு, முருகேசன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.