இலஞ்சியில் டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தின விழா நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் தலைமை வகித்தார், உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் ஐசக் கார்கில் போர் மற்றும் இந்திய வெற்றி குறித்தும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். மாணவ ஆசிரியர்கள் ஜெஸ்லின், ஹெப்சி, காவியா, மன்சூரா, ருக்கையா ரூகி, சாருமதி, ஆயிஷா நமீரா, மகாலட்சுமி, ஹெப்சி ஆகியோர் கார்க்கில் வெற்றியில் ராணுவ வீரர்களின் பங்கு குறித்து பேசினர். தொடர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் உதவி பேராசிரியர்கள் லீதியாள் சொர்ண ஜெயா, ஜெனிபர், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அனிதா, அலுவலக ஊழியர்கள் ப்ரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.