தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், மருத்துவ சேவை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய சேவைகளில் முதல் இடத்தில் சிறந்து விளங்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்ட செயல்பாட்டில் இரண்டாவது இடம் பெற்றுள்ள கடையநல்லூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான விருதினை தலைமை மருத்துவர் அனிதா பாலின் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா விருதுகள் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் தலைமை மருத்துவர்கள், குடியரசு தினவிழாவில் விருதினை பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!