தென்காசி தலைமை மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து தமிழகத்தில் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்நிலையில், கடந்த 10.01.2025 வெள்ளிக் கிழமை அன்று சென்னை பொது சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் வைத்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சரால் தென்காசி மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசால் வழங்கப்படும் இந்த விருதினை தென்காசி தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அலுவலர் ராஜேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர், தேசிய நல குழும இயக்குனர், சுகாதாரப் பணிகள் இயக்குனர், பொது சுகாதாரம் இயக்குனர், சுகாதார உயர்கல்வி இயக்குனர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பான சாதனை புரிந்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை நிர்வாகத்தையும், பணியாளர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா ஆகியோர் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.