தென்காசி நகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; 10 குழந்தை செல்வங்களுக்கு தங்க மோதிரம்..

தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்..

தென்காசியில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தென்காசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா தென்காசி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர திமுக அலுவலகத்தில் வைத்து புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து புதிய நீதி மன்றம் அருகில் கனி ஹார்டு வேர்ஸ் மைதீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, நகர கழக நிர்வாகிகள், அவைத் தலைவர் கிட்டு, துணை செயலாளர்கள் பால்ராஜ், ராம்துரை, பொருளாளர் சேக்பரீத் மாவட்ட பிரதிநிதிகள் பால சுப்பிரமணியன், மைதீன் பிச்சை, நகர்மன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் குமார் பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி முகமது ரபி, சுப்பிரமணியன், இசக்கி சுந்தர், இளைஞர் அணி இசக்கி துரை, முரளி, அருண், மணிராஜ், தொண்டரணி கோபால் ராம், மாணவரணி மைதீன், அறங்காவலர் இசக்கி ரவி ஆகியோருடன் வட்ட கழக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!