தென்காசியில் ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து, கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் கல்விக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை வழங்காமல், ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்குவோம் என பேசி வருகிறார். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்.பி-க்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சரின் சர்ச்சை பேச்சை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொறுப்பாளர் வே. ஜெயபாலன், தென்காசி நகர செயலாளர் சாதிர் முன்னிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு ஒன்றிய கல்வி அமைச்சரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, தென்காசி அறங்காவலர் மாவட்ட குழு தலைவர் கே.என்.எல். சுப்பையா, செயலாளர்கள் ஒன்றிய அழகு சுந்தரம், திவான் ஒலி, ஜெயக்குமார் நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் பேரூர் கழக செயலாளர்கள் குற்றாலம் சங்கர் குட்டி, மேலகரம் சுடலை, முத்தையா இலஞ்சி, தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா, கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் ஜே.கே. ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ண ராஜா ஆகியோர்களுடன்,
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தங்கப் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி, மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், இலக்கிய பகுத்தறிவு பேரவை கருப்பண்ணன், தென்காசி நகர பொருளாளர் ஷேக்பரீத், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் என். பாலசுப்ரமணியன், குற்றாலம் சுரேஷ், இசக்கிதுரை, ராமராஜன், ஷேக் ஷபிக் அலி, நகர கழக நிர்வாகிகள் சன்ராஜா, சபரிமெஸ் சங்கர், ராம்துரை, வழக்கறிஞர் அணி ரகுமான் சாதத், சோமசுந்தரம், ஐடி விங் சுப்பிர மணியன், குற்றாலம் அறங்காவலர் குழு வீரபாண்டியன், ஸ்ரீதர், சுந்தர்ராஜ், சுப்பிர மணியன் ஆனந்த், திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.