ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மோடி அரசை கண்டித்து டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள பயணம் மேற்கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினரை மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி நடைபெறும் இப்போராட்டம் வெல்லும் என வாழ்த்தி அனுப்பி வைத்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே. ரமேஷ் தலைமையில் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.