திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று மாலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தெரிவித்து உள்ளார். மேலும், ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார் கனிமொழி. தொடர்ந்து கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், மேலப் பட்டமுடையார் புரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம் மற்றும் கலைஞர் நூலகத்தினை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து, அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் கழுநீர் குளத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கலைஞர் அறிவாலய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் கனிமொழி எம்.பி, தலைமை செயற் குழு உறுப்பினர் ஜேசு ராஜன் இல்லத்தினை திறந்து வைக்கிறார். பின்னர் சுரண்டையில் மெர்க்கன்டைல் வங்கி அருகில் நடைபெறும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். கனிமொழி எம்..பி. பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர், பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.