தென்காசி அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்..

தென்காசி அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்; முக்கிய தீர்மானம்..

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், தலைமை உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, தமிழ்ச்செல்வி, சமுத்திர பாண்டியன், கதிர்வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வரவேற்றார்.

கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது சரியான நேரத்திற்கு அனைத்து முகவர்களும் வருவதோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாற்றுக் கட்சி நிர்வாகிகளிடம் எந்த கருத்து வேறுபாடும் வேண்டாம். நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கண்டிப்பாக அனைவரும் இருக்க வேண்டும். நாம் கடைசி வரை கவனமாக இருக்க வேண்டும். நாம் பெறும் வெற்றியை நமது தலைவரிடம் கொண்டு சேர்ப்பது தான் நமது முதல் கடமை. வாக்கு எண்ணும் மையத்தில் அமைதியாக செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், அழகுசுந்தரம், திவான் ஒலி, பண்டாரம், ஒலி, அன்பழகன், சிவன் பாண்டியன், மகேஷ் மாயவன், ஜெயக்குமார், சுரேஷ், நகர செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், பாண்டியன், கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மகளிர் செயற்குழு அணி அமைப்பாளர் சங்கீதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், தென்காசி யூனியன் துணைத் தலைவர் கனகராஜ், முத்துப்பாண்டியன், தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல் சுப்பையா, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோருடன்,

பேரூர் கழக செயலாளர்கள் முத்தையா, முத்து, சுடலை, சிதம்பரம், குட்டி வக்கீல்கள் தங்கராஜ் பாண்டியன், வேலுச்சாமி, செந்தூர் பாண்டியன், இலக்கிய அணி வளனரசு, இளைஞர் அணி அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், முகம்மது அப்துல் ரஹீம், குற்றாலம் ஸ்ரீதர், தொண்டரணி இசக்கி பாண்டியன், குற்றாலம் கண்ணன், சுரேஷ், கரிசல் வேலுச்சாமி, ஜீவானந்தம், கருப்பண்ணன், இராஜேந்திரன், ராமராஜ், சண்முகநாதன், மோகன்ராஜ், வேலுச்சாமி, செல்வம், வாசுதேவன், ஐடிஐ ஆனந்தன், வெல்டிங் மாரியப்பன், ராம்துரை, பால்ராஜ், ஷேக் பரீத், இலஞ்சி காசி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்செயற்குழுவில் ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் கட்சிக்கொடி ஏற்றுவதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மக்களவைத் தொகுதி தேர்தல் சிறப்பாக நடத்திய தென்காசி தொகுதி பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!