தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி அரவிந்த் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார்.


அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் இன்று (06.01.2025) ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை எஸ்.பியாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவிலும், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் எஸ்.பியாக சென்னையிலும், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு துறையில் எஸ்.பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் திருப்பூர் மாநகரம், நுண்ணறிவு பிரிவு சென்னை மற்றும் திருச்சிராப் பள்ளி மாநகரம் தலைமையகம் ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையராக பணிபுரிந்து தற்போது தென்காசி மாவட்டத்தின் 6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட எஸ்.பிக்கு காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.