தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அரவிந்த், சென்னை மாநகர உளவுப் பிரிவு துணை கமிஷனராகவும், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர் மாநகர துணை கமிஷனர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். தற்போது திருச்சி மாநகர காவல் துறையில் தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியாக அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள அரவிந்த் தற்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் V.R.ஸ்ரீனிவாசன் தற்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.