தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும், முதல் நிலை காவலர் பிரபாகரன் என்பவர் பெயரில், கையொப்பமிடாத பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைக் காட்சிக்கு காணொளி வாயிலாக பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக M.ரமேஷ், தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு மூலம் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலை தளங்களில் மேற்படி காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், மேலும், காவலர் கொடுத்த மனுவில் காவல் உயர் அதிகாரிகள் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து எழுதியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேற்படி காவலர் பிரபாகரன் கடந்த 01.03.2023-ஆம் தேதி முதல் விட்டோடியாகி 04.10.2024-ஆம் தேதி பணிக்கு அறிக்கை செய்துள்ளார். காவலர்கள் வெளிநாடு செல்வது குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் பரப்பினார். மேற்கண்ட இரண்டு செயல்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உயர் அதிகாரிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து கையொப்பமிடாத மனுவை காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பியதாகவும், சமூக வலை தளங்களில் பேட்டி கொடுத்த வீடியோவையும் அனுப்பியுள்ளார். இக்குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிய வருகிறது. எனினும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.