தென்காசி மாவட்டத்தில் காவல் ஆளினர்களுக்கு CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. காவல்துறையின் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி 23.12.2024 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் விஜயசேகர் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த வகுப்பில் காவல் துறையினருக்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.



மேலும் கண்காணிப்பு கேமரா செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அவை மூலம் மாவட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் புவியிடங்காட்டி – GPS Location ஆகியவை எளிதில் பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் அசம்பவிதம் ஏற்பட்டால் அப்பகுதியில் காலதாமதம் இன்றி உடனே கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யவும், அசம்பாவிதம் நடந்த இடங்களில் கேமராக்கள் இல்லையெனில் அப்பகுதியில் புதிதாக கேமராக்களை அமைப்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.