கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..

சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48)  என்பவரை சாம்பவர் வடகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி கதிரவன் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த சாம்பவர் வடகரை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!