சமூக வலை தளங்களில் ஆபாசமாக பதிவிட்டநபர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி..

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி.அதிரடி நடவடிக்கை..

தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், சமூகவலை தளங்களில் ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பழிவாங்கும் நோக்கத்திற்காக அடையாளம் தெரியாத நபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருவதாகவும், இதை தடுத்து புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், தென்காசி காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. தனராஜ் வழிகாட்டுதலின் பேரில், காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான காவல் துறையினர் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஷாஜி முகமது என்பவரை 20.02.2024 அன்று அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!