பிராங்க் என்ற பெயரில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஷியல் மீடியாக்களில் Like, Share மற்றும் Followers க்கு ஆசைப்பட்டு Prank செய்வதாக கூறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமூக ஊடகங்களில் அதிகப்படியான Like, Share மற்றும் Followers அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல், பிறர் மனதை காயப்படுத்தும் விதமான செயல், இரு தரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் இது போன்ற செயல்களால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.