தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



திருநங்கைகள் மீது காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு சில திருநங்கைகள் செய்யும் இச்செயல் ஒட்டு மொத்த திருநங்கைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவும், இது போன்ற செயலை யாரும் செய்யவோ அல்லது செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும், திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எனவே அதற்கு முயற்சி செய்து சுய தொழில் தொடங்கலாம் எனவும், உங்களுக்கு காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.