தென்காசி மாவட்டத்தில் கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல். இவர், கடந்த 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க செயினை எடுத்து உரிய முறையில் ஊத்துமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பேச்சியம்மாள் வசம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் நேர்மையை பாராட்டும் விதமாக 21.10.2024 அன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பொன்னாடை அணிவித்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.