தென்காசி தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்பதை வடிவமைத்த மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.



இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் பள்ளி மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட போது, தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்று கண்டுபிடித்திருந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று பரிசு வழங்கி வாழ்த்தினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.