தென்காசி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பதியப்பட்ட வழக்குகளின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் விதமாக மாபெரும் விசாரணை முகாம் நடைபெற்றது.




இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அந்த உட்கோட்டங்களில் விசாரணை முகாம் ஏற்பாடு செய்து புகார் தாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை செய்து காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நான்கு நபர்கள் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தங்களின் குடும்பத்தினரை கண்டு பிடித்து கொடுத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்து சென்றனர்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.