தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கடையம் கல்யாணிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகனான பாலமுருகன்(36). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.