தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை, தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக முதலமைச்சர் 23-08-2024ஆம் தேதி பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
இதில் தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் (அண்ணா பதக்கம்) பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியமேரி மற்றும் தலைமைக்காவலர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.