தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S. சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.





பின்னர் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்து சிறப்பாக செயல்பட்ட ஆலங்குளம் காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி, தலைமை காவலர் சண்முகவேல் ஆகியோருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.