தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்; புதிய எஸ்பி உறுதி..

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், ஜாதி மத மோதல்கள், ரெளடிகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் எனவும் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் இன்று (14.08.2024) பதவி ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் முன்னதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராகவும், திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர காவல்துறை நிர்வாகம் மற்றும் அண்ணாநகர் துணை ஆணையராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 

தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி வி.ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்கள் மற்றும் ரெளடிகளின் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்படும். போதை பொருட்களின் நடமாட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். தகவல்கள் ஏதாவது இருப்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுபாட்டு அலுவலகத்திற்கு 9884042100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!