தென்காசி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு, வழிப்பறி, போக்சோ தொடர்புடைய பின்வரும் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் கிழக்குத் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கருப்பசாமி (31) மற்றும் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு, வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் திரு.வி.க தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் மகன் சோலைவேல் (26) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.