குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; கேரள மாநிலத்தை சேர்ந்த மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..
குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில், பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (24), கோட்டையம் ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழா முரளி என்பவரின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.