புளியங்குடியில் வாகனம் திருடிய வழக்கு; குற்றவாளிகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு..
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் திருட்டு வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருடிய வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தங்க ரத்தினம் என்பவரின் மகன் ராஜேஷ்(37) மற்றும் சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாதுரை என்பவரின் மகன் திலிப் ராஜா (35) ஆகியோரை அப்போதைய காவல் ஆய்வாளர் கோவிந்தன் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கின் விசாரணையானது சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரணை செய்த நீதிபதி காளீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 01 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த புளியங்குடி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.