தென்காசி மாவட்டத்தில் பணி நிறைவு பெற்ற காவல்துறையினர்; மாவட்ட எஸ்.பி. சான்றிதழ் வழங்கி வாழ்த்து..
தென்காசி மாவட்டத்தில் பணி மூப்பின் காரணமாக காவலர்கள் ஓய்வு பெற்றனர். இந்நிலையில் பணி நிறைவு பெற்ற காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.



தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்கள் ஆறுமுகசாமி, சரசையன், ஜெயகுரு, இருளப்பன், சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுலா, சாலமன் வேதமணி மற்றும் வாசுதேவநல்லூர் காவல் நிலைய தூய்மை பணியாளர் மாரியப்பன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.