தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு; காவல்துறையினர் பங்கேற்பு..

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024  அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!