தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறைத் துணைத் தலைவர் ஆய்வு..

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறைத் துணைத் தலைவர் ஆய்வு..

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் USP தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS ஆய்வினை மேற்கொண்டு காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் உடனிருந்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!