தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை..

தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனை..

நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!